பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் ராசி
2025-09-6
ஒருவர் பிறந்த ஜாதகத்தை ஜனன ஜாதகம் என்று அழைப்பர் ஜன ஜாதகம் என்னவென்றால் ஒவ்வொரு ஜனனம் ஏற்படும் பொழுது நமது வான மண்டல சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகமும் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை அறிவது அதற்கான குறிப்புகளை அதற்கான டிகிரிகளையும் எடுத்து வைப்பது ஜாதகம் ஆகும்.
உதாரணத்துக்கு ஒருவர் எந்த நேரத்தில் பிறக்கிறார் எந்த கிழமையில் இருக்கிறார் எந்த இடத்தில் பிறக்கிறான் என்பதைக் கொண்டு அன்றைய நாளின் கிரக நிலைகளை குறித்து வைப்பது.
ஒரு ஜாதகத்தை உருவாக்க அடிப்படையாக தேவைப்படும் மூன்று விஷயங்கள்
இந்த மூன்று அடிப்படை விஷயங்களை கொண்டு ஒரு ஜாதகத்தை ஒரு ஜோதிடரால் உருவாக்க முடியும். இந்த விவரங்களையும் அடிப்படையை கொண்டு ஒரு ஜோதிடர் அந்த வருட திருக்கணித பஞ்சாங்கத்தில் உதவியுடன் ஒருவர் ஜனன ஜாதகத்தை உருவாக்க முடியும். தற்போதைய கணினி உலகில் ஜோதிடரால் கூட கணிக்க முடியாத பல ஜோதிட கடிதங்களை கணினியின் உதவி கொண்டு கணிக்க முடியும் இது பல இணையதளங்கள் உங்களுக்கு வழங்கி வருகிறது.
ஜாதகம் என்பது நமது ஜனன கால குறிப்பு மட்டுமல்ல நமது எதிர்காலத்தை கடிக்கக் கூடிய ஒரு சிறந்த கையேடு ஆகும். இந்த கடிதத்தை பயன்படுத்தி சிறந்த ஜோதிட கல்வி பெற்றவர்களால் மட்டும் நமது எதிர்காலத்தை அடிக்க முடியும். தற்போது எதிர்காலத்தை கடிக்க மட்டுமல்லாமல் வேறு பல வடிவங்களில் நமது ஜாதகத்தை பயன்படுத்தி முடியும் இப்போதைய காலகட்டத்தில் நமது எதிர்காலத்தை கணிக்க மட்டும் அல்லாமல் திருமண வரன் பார்க்கவும், குழந்தைக்குப் பெயர் வைக்கவும் மற்றும் பல இடங்களில் இந்த ஜனன ஜாதகத்தை பயன்படுத்துகின்றனர்.
ஜனன ஜாதகத்தில் (jathagam)முக்கியமாக கருதப்படும் கணக்குகள்
ஜாதகத்தின் நமது வாழ்நாள் பலனை ஜோதிடரால் மட்டும் கணிக்கப்படும் ஒரு மேல் தட்டு விஷயமாக மட்டும் பார்க்க வேண்டாம் நமது பிறந்த கால ஜாதகத்தில் சில அடிப்படை விவரங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நமது ஜனன ஜாதகத்தில் (Tamiljathagam) பிறந்த லக்னம் ஆனது என்னவென்று தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும் நமது லக்னத்தை மையமாகக் கொண்டு ஜாதகத்தில் பன்னிரு பாவங்களும் பிரிக்கப்படும் என்பது முக்கியமான ஒரு அமைப்பாகும் உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்னமாக பிறந்தவர் என்றால் உங்களுக்கு மீன லக்னம் பன்னிரெண்டாம் பாவமாகும் இவ்வாறு ஒவ்வொரு லக்னமும் மையமாகக் கொண்டு உங்களது 12 பாவங்களும் கணக்கிடப்படும் அந்தப் 12 பாவங்களைக் கொண்டு உங்களது வாழ்நாள் பலனை அறிய முடியும் ஒரு சில நேரம் உங்கள் லக்னத்தை மையமாக கொண்டு கூட நீங்கள் யார் என்பதை நன்கு பயின்ற ஜோதிடரால் சுலபமாக உங்களை கணிக்க முடியும்
பிறந்த ராசி என்பது ஒவ்வொருவரின் சந்திரனின் நிலையைக் கொண்டு அறியப்படுவது ஒருவர் பிறந்த ராசி (find rasi) வைத்து அவர்களின் தனித்துவத்தை சுலபமாக கூற முடியும் எப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் அந்தந்த ராசியில் பிறந்தவர்கள் அவ்வாறு இருப்பார்கள் என்பது பொதுவான கருத்தாகும் இருப்பினும் அது சரிவர பிரித்து ஆராய கூடிய தெளிவு சிறந்த ஜோதிடர்களிடம் உண்டு உங்கள் பிறந்த ராசியை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்
பிறந்த நட்சத்திரம் (find Nakshatra)என்பது சந்திரன் எந்த ராசியில் எந்த நட்சத்திர பாதத்தில் நிற்கிறாரோ அதன் அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதாகும் பொதுவாக ஒருவருக்கு ராசி வேறாக இருக்கலாம் நட்சத்திரம் பாதம் வேராக இருக்கலாம் அதுபோல் ஒவ்வொருவருக்கும் இருப்பது தனித்துவமான பிறந்த நட்சத்திரமாகும் 108 பாதம் நட்சத்திரத்தில் சந்திரன் எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதன் அடிப்படையாகக் கொண்டு வருவது நமது பிறந்த கால நட்சத்திரமாகும் ராசி லக்னம் நம்மளை எவ்வாறு கணிக்க முடியுமோ அதன் இன்னொரு அமைப்பான நட்சத்திரத்தைக் கொண்டும் உங்களது பொதுவான பலன்களை கூற முடியும் இருப்பினும் அது பொதுவான கருத்துகளை ஆகும் துல்லியமாக ஆராய வேண்டுமானால் உங்களது ஆத்மார்த்தமான ஜோதிடரை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
சந்திரனைக் கொண்டு நமது ராசி மற்றும் நட்சத்திரத்தை நாம் அடிப்படையாக கற்றுக்கொண்டோம் அதேபோல் பிறந்த கிழமை எந்த கிழமை வருகிறது அதன் அடிப்படையிலும் உங்களது பலன் இருக்கும் என்பது ஜோதிட ஐதீகம் வாரம் ஏழு நாள் ஏழு கிழமை இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே அதேபோல் நாம் எந்த கிழமையில் பிரிக்கிறமோ அந்தக் கிழமையின் ஆதிக்கம் நம்மிடம் மிகுவாக இருக்கும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அமைப்பு ஆகும் அதனை அடிப்படையாகக் கொண்டும் நம்மைப் பற்றி பொதுவான பலன்களை கூற முடியும் ஆயினும் அது பொதுவானதே ஆகும்
லக்னாதிபதி என்பவர் நமது லக்னத்திற்கான வழிநடத்துபவர் ஆவார் எப்படி ஒரு லக்னம் நம்மளை வழி நடத்துமோ அதேபோல் நமது ஜாதகத்தில் இருக்கும் நமது லக்னத்தின் அதிபதி நன்றாக இருக்க வேண்டும் உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர் ஆனால் உங்களது லக்னாதிபதி செவ்வாய் ஆவார் செவ்வாய் என்றால் ஆங்காரம் என்றும் ஒரு பொருள் உண்டு
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் உங்கள் பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான விஷயங்கள் மட்டுமே நன்றி
பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் ராசி
2025-09-6