நாம் தினமும் கையில் அணியும் கடிகாரம், கடந்து கொண்டிருக்கும் நேரத்தை மட்டும் காட்டுகிறது. ஆனால் பஞ்சாங்கம் (Today Panchangam in Tamil) என்பது வரவிருக்கும் வாழ்வின் சிறப்பான நேரத்தை சுட்டிக்காட்டும்.
ஒரு காலத்தில், மக்கள் நேரத்தை அறிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை பார்த்து வாழ்ந்தார்கள் வந்தார்கள். அந்த பழக்கம் தான் பின்பு பஞ்சாங்கமாக மாறியது. இதன் அடித்தளம் Hindu Calendar முறையாகும்.
நாம் இன்று பயன்படுத்துவது திருக்கணித பஞ்சாங்கம் (Today Panchangam in Tamil) என்றாலும். இன்றும் பல கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க முறையே பின்பற்றி வருகின்றன.
திருக்கணித பஞ்சாங்கம் இன்று திதி, நட்சத்திரம், நேரம் அனைத்தையும் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.
அது ஒரு நவீன கடிகாரம் போல, எப்போதும் சரியான நேரத்தைச் சொல்கிறது, அதனால், இன்றைய தலைமுறையிலும் இதையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
3. நல்ல நேரம் என்பது வெறும் அதிர்ஷ்டமா?
நல்ல நேரம் (Gowri Nalla Neram today) என்பது பலர் நினைப்பது போல “அதிர்ஷ்டம்” அல்ல. அது, ஒரே இடத்துக்கு செல்ல பலர் பயணிக்கும் சாலையில் நாம் மட்டும் போக்குவரத்து குறைவான சாலையைத் தேர்வு செய்வது போல.
அதுபோல, ஒரு வேலையை ராகு காலத்தில் தொடங்கினால் தடைகள் வரும். அதனால் தான் today panchangam in tamil ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கு உகந்த நேரத்தை நமக்குத் துல்லியமாகக் காட்டுகிறது."
இது இரண்டும் அறிவதன் மூலம் நம் அன்றாட பயணம் எளிதாகும்.
4. திதி - வளர்பிறையை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
வளர்பிறையில், சந்திர ஒளி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தக் காலத்தில் நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு முயற்சிக்கும், புதிய தொழில், படிப்பு அல்லது உறவு ஆகியவற்றிற்க்கு இயற்கையே ஆதரவு தரும்.
நம் முன்னோர்கள் இந்த ரகசியத்தை புரிந்திருந்ததால், தைப்பொங்கல் போன்ற முக்கிய புதிய தொடக்கங்களை வளர்பிறையில் கொண்டாடினர்.
பலர் தினசரி Today Panchangam in Tamil பார்த்து, வளர்பிறை நாட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். நேரம் தரும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் , அதோடு இணைந்து செயல்படுவதற்கான எளிய வழி இது.
வளர்பிறை, தொடக்கங்களுக்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. வளர்பிறையில் தொடங்கிய விஷயங்கள் நீண்ட காலம் நிலைக்கும் என நம்பப்படுகிறது.
எப்போதும் வளர்பிறையில் தொடங்கும் வேலைகள், திடீர் முடிவாக இல்லாமல் திட்டமிட்டதாக இருக்கும். அதனால் அவசரத் தவறுகள் குறையும்; பாதியில் கைவிடும் எண்ணமும் குறைவாக இருக்கும்.
உங்கள் அடுத்த புதிய தொடக்கத்திற்காக காத்திருக்கிறீர்களா? இன்றைய பஞ்சாங்கத்தைப் பாருங்கள்.
5. நட்சத்திரம்: நாளின் வானிலை அறிக்கை
நட்சத்திரங்களைப் பார்க்காமல் நாளை தொடங்குவது, வானொலி வானிலை அறிக்கையைக் கேட்காமல் வெளியேறுவதுபோல் தான். குடையை எடுத்துச் செல்லாமல் வெளியேறுவது போல, சரியான நேரத்தை கவனிக்காமல் முயற்சியைத் தொடங்குவது சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
நட்சத்திரம் என்பது சந்திரன் ஒவ்வொரு நாளும் இருக்கும் நட்சத்திர நிலையைக் குறிக்கும், இன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார், அது உங்கள் திட்டங்களுக்கு எப்படி இசைவாக இருக்கும் என்பதை இன்றைய பஞ்சாங்கம் (Today Panchangam in Tamil) துல்லியமாக விளக்குகிறது.
நட்சத்திரம் + நாளின் நேரம் = வெற்றி வாய்ப்பு. ஒரே நாளில் சரியான நட்சத்திரத்திலும், நல்ல நேரத்திலும் செயல் தொடங்கினால், தடைகள் குறையும், மனமும் தெளிவாக இருக்கும்.
உங்கள் பிறந்த நட்சத்திரம் அந்த நாளின் நட்சத்திரத்துடன் இணைந்தால், முடிவுகள் உங்கள் தனிப்பட்ட சூழலுக்கு ஏற்றதாக சிறப்பாக அமையும்.
அதனால், தினசரி Today Panchangam in Tamil பார்த்து, நட்சத்திரங்களையும் நல்ல நேரங்களையும் ஒன்று சேர பார்த்தால்,உங்கள் முயற்சிக்கு இயற்கையின் ஆதரவைப் பெற முடியும்.
6. யோகம் & கரணம்: நல்ல நாளில் கூட ஏன் தடைகள் வருகின்றன?
உதாரணமாக, நீங்கள் ஒரே பயணத்தை இரண்டு வேறு நேரங்களில் தொடங்குகிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். ஒன்று அதிகாலை நேரம், இன்னொன்று மதிய நேரம்.
அதிகாலையில் பயணிக்கும்போது பாதை அமைதியாக இருக்கும்; காற்று மென்மையாக வீசும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சுலபமாகச் செல்லலாம்.
ஆனால் அதே பயணத்தை மதியம் 1 மணிக்கு தொடங்கினால், வெய்யில் கடுமையாக இருக்கும், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிக்கும், தவிர்க்க முடியாத தாமதங்கள் வரும்.
பாதை அதேதான், ஆனால் நேரம் மாறுவதால் அனுபவம் மாறுகிறது.
இதுபோலவே, நல்ல நாளில் கூட தடைகள் தோன்றுவதற்குக் காரணம், கரணம் தான். யோகம் நல்ல நாளை காட்டும் ஆனால் கரணம் தான் நல்ல நேரத்தை காட்டும்.
அதாவது யோகம், ஒரு நாள் எவ்வளவு சிறப்பானது என்பதை காட்டுகிறது. ஆனால், கரணம் அந்த நாளில் எந்த நேரம் சிறப்பாகச் செயல்படும் என்பதை நிர்ணயிக்கிறது.
ஆனால் இதை விட முக்கியமான ரகசியம் ஒன்று உள்ளது,
ஏன் நாம் திருமணத்தை அதிகாலை அல்லது காலை நேரத்தில் நடத்துகிறோம் தெரியுமா ? அது வெறும் பழக்கம் அல்ல; அதற்குப் பின்னால் ஆழமான காரணங்கள் உள்ளன.
அந்த நேரத்தில் தொடங்கும் உறவு, தெய்வீக ஆசீர்வாதத்துடன் இருக்கும், மேலும் அதிகாலை நேரத்தில் மனம் மிகவும் தெளிவாகவும், அமைதியாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் தான் திருமணங்கள் அதிகாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. அந்த நேரம், அன்றைய நாளின் சாதகமான யோகம் மற்றும் சரியான கரணம் ஒன்றுசேரும் வாய்ப்பு அதிகம் உள்ள நேரமாகும்.
இதேபோல, உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை திட்டமிடும்போது எங்கள் tamil jathagam பக்கம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
பஞ்சாங்கத்தில் சந்திரனின் முக்கியத்துவம்
சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நட்சத்திர வீட்டில் பயணம் செய்கிறான். அவன் நகரும் ஒவ்வொரு கணமும் ஒரு புதிய திதி உருவாகிறது.
அதனால் தான், பஞ்சாங்கத்தில் திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவை தினமும் மாறுகின்றன.
இந்த தினசரி மாற்றங்களின் மையத்தில் இருப்பது சந்திரனே.
சந்திரனின் நிலையைக் புரிந்துகொள்வது, உங்கள் தினசரி வாழ்க்கையை எளிதாக மாற்றும் ஒரு எளிய வழி. இன்று மனம் ஏன் அமைதியாக உள்ளது அல்லது ஏன் குழப்பமாக உள்ளது என்பதை தெரிந்துகொண்டால், தேவையற்ற பதற்றம் குறையும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
இன்று சந்திரன் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறிய Today Panchangam in Tamil பார்த்து, உங்கள் நாளை சந்திரனின் பாதையோடு திட்டமிடுங்கள்.
பஞ்சாங்கத்தின் 6 முக்கிய பயன்கள்
- தொழில் முன்னேற்றம் அடைய
- தினசரி காரியங்களுக்கு நல்ல நேரத்தை தேர்வு செய்ய
- . திருமணம் மற்றும் பிற விழாக்களுக்கு சுப நாளை முடிவெடுக்க
- குழந்தையின் முக்கிய விழாக்களுக்கு சிறந்த நேரம் பார்க்க
- வீடு மற்றும் சொத்து தொடர்பான முடிவுகளுக்கு வழிகாட்ட
- ஆன்மீக நிகழ்வுகளுக்கு நல்ல நேரம் கணிக்க (Gowri Nalla Neram today)
பஞ்சாங்கம் பார்க்காமல் நாளைத் தொடங்கினால் ஏற்படும் விளைவுகள்
- ஒரு நாளின் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவற்றை பின்பற்றாமல் ஒரு காரியத்தை செய்தால் மனம் தெளிவாக இருக்காது.
- இதனால் ஏற்படும் விளைவுகளானது, முடிவுகளை எடுப்பதில் கடினம் மற்றும் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் எப்படி போட்டிக்கு முன் சூழ்நிலையை ஆய்வு செய்துவிட்டு களத்தில் இறங்குவாரோ, நீங்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன், பஞ்சாங்கம் மூலம் சூழ்நிலையை ஆய்வு செய்யலாம்.
நாளின் திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவை உங்கள் முயற்சிகளை எப்போது தொடங்குவது, எந்த நேரம் தடைகள் குறைவாக இருக்கும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதலை வழங்குகின்றன.
பஞ்சாங்கம் (Today Panchangam in Tamil) நல்ல நாளையும், நேரத்தையும் காண்பிக்கின்றது.
ஜாதகம் என்பது அந்த நல்ல நேரம், தனிப்பட்ட ஒரு நபரின் பிறந்த நேரத்தின் கிரக நிலைகளுடன் பொருந்துகிறதா என்பதை ஆராய்ந்து தனிப்பட்ட முறையில் வாழ்க்கையை கணிக்கின்றது.