பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் ராசி
2025-09-6
ஜனனம் என்பது அனைத்து உயிருக்கும் பொதுவான ஒரு செயல்பாடு ஆகும் இருப்பினும் நாம் மனித குலம் ஜனனி நேரத்தை வைத்து நமது வாழ்க்கையை பற்றி கணிக்கக் கூடிய பல வேகத்தக்க விஷயங்களை வரையறை திருவிழா அதன் குறிப்புகளை எடுத்து வைத்து இலவச வாழ்நாள் ஜாதகம்(free tamil jathagam) கணிப்பது ஜாதகம் எனப்படும்.
ஜனனம் என்பது அனைத்து உயிருக்கும் பொதுவான ஒரு செயல்பாடு ஆகும் இருப்பினும் நாம் மனித குலம் ஜனனி நேரத்தை வைத்து நமது வாழ்க்கையை பற்றி கணிக்கக் கூடிய பல வேகத்தக்க விஷயங்களை வரையறை திருவிழா அதன் குறிப்புகளை எடுத்து வைத்து இலவச வாழ்நாள் ஜாதகம்(free tamil jathagam) கணிப்பது ஜாதகம் எனப்படும்.
ஜாதகத்தை கணிக்க முதலில் நமக்கு துல்லியமான ஜனன ஜாதக குறிப்பு அவசியம் அந்தக் குறிப்பை கொண்டு நமது வாழ்நாள் ஜாதகத்தை(life time horoscope ) எவ்வாறு கணிக்க முடியும் என்பதன் தொகுப்பு இந்த கட்டுரையாகும்.
வாழ்நாள் ஜாதகத்தை கணிக்க ( prediction ) இரண்டு முறை உண்டு ஒன்று நமது பன்னிரு பாவங்களை அதன் கிரகத்தின நட்சத்திரங்களை கொண்டு தணிப்பது முதல் முறை மற்றும் நமது தசா புத்தியின் காலங்களை வைத்து எந்த காலத்தில் எந்த கிரகம் ஆட்சி செய்கின்றது அந்த கிரகத்தின் பாவங்களைக் கொண்டு நமது வாழ்நாள் ஜாதகத்தை துல்லியமாக கணிக்க( prediction ) முடியும்.
பொதுவாக ஜாதகத்தில் நன்மை தீமை செய்யக்கூடிய இரு கிரகங்களும் அனைவரின் ஜாதகத்திலும் உண்டு நன்மைகளை மட்டும் செய்யக்கூடிய கிரகங்களும் கிடையாது தீமையை மட்டும் செய்யக்கூடிய கிரகங்களும் கிடையாது எனவே ஒரு கிரகம் நமது ஜாதகத்தில் நன்மை செய்கின்றதா தீமை செய்கின்றதா நன்மையின் காலம் எப்போது தீமையின் காலம் எப்போது என்பதையும் முழுமையாக நமது ஜனன கால குறிப்புகளை வைத்து துல்லியமாக அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களால் சுலபமாக கணிக்க முடியும்.
ஜனன ஜாதகத்தில் முதலாம் பாவம் என்பது லக்னம் எனப்படும் இந்த முதலாம் பாவம் குறிக்கும் விஷயங்கள் என்னவென்றால் லக்னம் என்பது நாம் என்று அர்த்தம், அதாவது நமது தோற்றத்தைப் பற்றி குறிக்கக் கூடியதாகும் நமது லக்னம் எந்த ராசி என்பதை வைத்தும் நமது லக்னத்தில் என்னென்ன கிரகங்கள் இருப்பது என்பதை வைத்தும் அந்த கிரகங்கள் நிற்கும் நட்சத்திரங்களை வைத்தும் நாம் உடல் பாவம், முகபாவம், தோற்றம் மற்றும் நமது ஆரோக்கிய மேன்மை எவ்வாறு இருக்கும் என்பதை சிறப்பாக கணிக்க( prediction ) முடியும் இந்த லக்னத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த லக்னத்தில் அடிப்படையில் தான் நமது பொதுவான குணாதிசயங்கள் இருக்கும் என்பது ஜோதிட நூல்கள் சொல்லுகின்றன.
இரண்டாம் பாவம் குறிக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்பது என்னவென்றால் நமது சம்பாத்தியம் நமது சம்பாத்தியத்தில் சிறப்பையும் நாம் எவ்வாறு சம்பாதிக்க போகிறோம் என்பதையும் எடுத்துக் கூறக் கூடியது இந்த இரண்டாம் பாகம் ஆகும் சம்பாத்தியம் மட்டும் இன்றி நமது பேச்சு நமது குடும்பம் உடல் பாகமான நமது கழுத்தைப் பற்றியும் நமது தொண்டையின் ஆரோக்கியத்தை பற்றியும் இந்த பாவத்தில் நம்மால் சிறப்பாக கணிக்க முடியும் அத்துடன் நமது வலது கண்ணின் ஆரோக்கியத்தை பற்றியும் அதற்கு வரும் பிரச்சனைகள் பற்றியும் ஜோதிட உதவியுடன் கணிக்க(prediction) முடியும்.
மூன்றாம் பாவம் என்பது நமது உடன்பிறந்தோரை பற்றி சிறப்பாக ஆராய கூடிய பாவமாகும் நம் உடன் பிறந்தவர் எத்தனை பேர் என்பதை பற்றியும் அவர்கள் எவ்வாறு நமக்கு உதவுவார்கள் அவர்கள் நமக்கு என்ன நன்மை உண்டு தீமை உண்டு அதை எப்படி தவிர்த்துக் கொள்வது அவரிடம் எப்படி நமது உறவை ஏற்படுத்திக் கொள்வது என்பதை குறிக்கக்கூடிய பாவமாகும் இந்த மூன்றாம் பாவம் மற்றும் நம்முடைய தைரியம், சிறிய பயணங்களை பற்றியும் காண முடியும். நமது உடல் பாவங்களான கைகள் மற்றும் வலது காதை பற்றிய விவரங்களையும் இந்த மூன்றாம் பாவம் குறிக்கும்.
மானுடனின் ஆறறிவை பூர்த்தி செய்யும் இந்த அடிப்படை கல்வியினை பற்றி நமக்கு எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க( prediction ) கூடிய இடம் இந்த நான்காம் பாவமாகும், இந்த அடிப்படைக் கல்வி நமக்கு சிறப்பாக தரக்கூடியவர்கள் யார் தொந்தரவு செய்யக்கூடிய கிரகங்கள் யார் என்பதை பொறுத்து இது நான்காம் பாகம் கணிக்கப்படுகின்றன. மற்றும் நமது தாயாரை பற்றி கணிக்கக் கூடிய இடமாகவும் நான்காவும் அமைகிறது நமது வாழ்நாளில் நாம் அடையக்கூடிய அசையா சொத்துக்களான வீடு நிலம் ஆகியவற்றையும் குறிக்கும் இந்த நான்காம் பாவம். மற்றும் நம்மைப் பற்றி பொதுவான நமது வாழ்வில் நடக்கும் சந்தோசங்கள் நமது துன்பங்கள் ஆகியவற்றையும் கூறுகிறது. நமது உடல் பாகங்களான மார்பகத்தின் ஆரோக்கியத்தையும் அதற்கு வரும் பிரச்சனைகளையும் கூறப்படும் இந்த நான்காம் பாவம்.
நமது வாழ்வின் அர்த்தமான நமது சந்ததிகள் அதாவது நமது குழந்தைகளை பற்றி முக்கியமாக கூறுகிறது இந்த ஐந்தாம் பாகம் அதேபோல் இந்த ஐந்தாம் பாவம் என்பது நமக்கு சிந்தனையை தரக்கூடிய பாவமாகும் நமது யோசனை எவ்வாறு இருக்கும் என்பதை கிரகங்களின் பாதசாரங்களின் வைத்து கூறப்படும் நாம் வாழ்வில் மிகவும் போற்றப்படக்கூடிய சிறப்பான ஆட்களாக மாறுவோமா என்பதையும் இந்த ஐந்தாம் பாவம் உள்ள கிராமங்களின் அமைப்புகளை வைத்து காண முடியும் அது மட்டுமல்லாமல் நமது நமது வாழ்க்கைத் துணைவி காண ஏழாம் பாவத்துடன் சம்பந்தப்படும் இந்த ஐந்தாம் வகுப்பு நமது ஜனன ஜாதகத்தில்(birth horoscope ) ஐந்தாம் பாவத்திற்கும் ஏழாம் பாவத்திற்கும் சம்பந்தம் ஏற்படும் பொழுது நாம் காதல் வாய்படுவோம் காதல் திருமணத்தில் முடியும் என்பது ஜோதிட கணத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அத்துடன் நமது வயிற்றுடன் சம்பந்தப்படும் இந்த ஐந்தாம் பாவம்.
ஜனன ஜாதகத்தில் ( birth horoscope ) ஆறாம் பாவகம் என்பது நமக்கு நமது வாழ்வில் சற்றே நடக்கும் நோய்களையும் நாம் நோயால் எவ்வாறு வசப்படுவோம் என்பதை பொதுவாக குறிக்கக்கூடிய பாவம் ஆகும் இந்த பாவத்தின் கிரகங்களின் அடிப்படையில் கொண்டு நமது நோயின் தாக்கம் அதிகமாக இருக்குமா? குறைவாக இருக்குமா? நமது ஆரோக்கியம் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பதை முழுமையாக கணிக்க கூடிய பாவமாகும். ஆறாம் பாவம் பொதுவாக நமது ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் நமது துன்பங்களையும் நாம் வாழ்வில் எவ்வாறு கடன் படுவோம் என்பதையும் கடன் வாங்க பயப்படுவார் என்பதையும் நாம் எவ்வாறு காயப்படுவோம் என்பதையும் உறவுகளான நமது அத்தை மாமா ஆகியோர்களை பற்றியும் குறிக்கக் கூடியதாகும் இவர்களுடன் நமக்கு விரோதிகள் யார் என்பதையும் சிறப்பாக கணிக்கக் கூடிய பாவம் ஆகும். உடல் பாகமான நமது இடுப்பைக் குறிக்கக்கூடியது இந்த ஆறாம் பாவம்.
ஏழாம் பாவம் வாழ்வில் ஒவ்வொரு பிறப்பிற்கான மற்றொரு ஜெனனம் என்பது மற்றொரு வாழ்க்கை என்பது நமது திருமணமாகும் அந்த திருமணத்தை குறிக்கக் கூடியது இந்த ஏழாம் பாவம். நாம் முன்பு சொன்னது போல் நமது ஜனன ஜாதகத்தில்( birth horoscope ) ஐந்தாம் பாவத்திற்கும் ஏழாம் பாவத்திற்கும் சம்பந்தம் ஏற்படும் பொழுது அந்த சம்பந்தத்தில் கிரகங்கள் சிறப்பாக அமையும் பொழுது நமது வாழ்க்கையில் திருமணம் என்பது காதல் திருமணமாக மாறுவோம் ஒரு வாய்ப்பு உண்டு. அத்துடன் நமது இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதையும் குறிக்கக் கூடியது.
ஜனனத்தின் புள்ளியை முடித்து வைக்கும் மரணத்தை பற்றி கூறக்கூடியது உங்கள் ஜாதகத்தில்(tamil jathagam ) எட்டாம் பாவம். நமது வாழ்நாளில் நடக்கக் கூடிய தடைகள் தாமதங்கள் அதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லும் இந்த எட்டாம் பாவம். வாகனங்களின் விபத்துகளையும் உயர்த்த ஏற்படும் காலங்களையும் அதற்கான தசாபுத்திகளும் கணித்து அதற்கான நேரங்களை கணிக்க உதவப்படுவது இந்த எட்டாம் வகுப்பு. உடல் பாவங்களான நமது பிறப்பு உறுப்பை குறிக்கக் கூடியது இந்த எட்டாம் பாவம்(8th house).
நாம் அனைவரும் விரும்பக்கூடிய அதிர்ஷ்டம் அதற்கான கால நேரங்களையும் கூறக்கூடியது இந்த ஒன்பதாம் பாவம். அதிர்ஷ்டத்தின் முழு விவரங்களையும் நாம் எவ்வாறு நமது பாரம்பரியத்தை கடைபிடிப்போம் என்பதையும் குறிக்கும் அத்துடன் ஒன்பதாம் பாவம் ஜாதகரின் தந்தையை குறிக்கும் தந்தையின் உடல் நலங்களை பற்றியும் தந்தை எவ்வாறு இந்த ஜாதகருக்கு இருப்பார் என்பதையும் இந்த ஒன்பதாம் பாவத்தின் கிரகங்களின் அதன் நிலைகளில் வைத்து கூறலாம். மற்றும் நமது நீண்ட தூர பயணத்தில் சிறப்புகளையும் அறிய பயன்படும் இந்த ஒன்பதாம் பாவம் உதாரணத்திற்கு ஒரு தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் சரியான காலம் இதுவா என்பதை நமது ஒன்பதாம் பாவத்தின் கால நிர்ணயத்தை வைத்து முடிவு செய்யலாம் அதற்கேற்றவாறு உங்கள் பயணத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் முதியோர் ஆகும் காலத்தில் இந்த ஒன்பதாம் பாவத்தை வைத்து உங்களது பேரக்குழந்தை பற்றியும் கூற முடியும்.
ஒவ்வொரு ஜனன ஜாதகரின் கர்மாவை முடிவு செய்வது இந்த பத்தாம் பாவமாகும் கர்மா என்பது நாம் இந்த ஜென்மத்தை எடுத்ததற்கான பொருளாகும் நாம் எந்த வேலை செய்வதற்காக இந்த ஜனனம் எடுத்துள்ளோம் என்பதை குறிக்கும் இந்த பத்தாம் பாவம். நாம் தொழிலைக் குறிப்பதற்கு மட்டுமல்லாமல் நாம் வாழ்வில் அனுபவிக்க கூடிய பதக்கங்களை பற்றியும் நாம் நம் தொழில் எவ்வாறு உயர்வோம் என்பதை பற்றியும் அதற்கான கால நிர்ணயங்களைக் கணித்து நமது வாழ்வில் ஏற்படக்கூடிய வெற்றிகளையும் குறிக்கும் இந்த பத்தாம் பாவம். நமது உடலில் முழங்காலை குறிக்கும் பத்தாம் பாவம்.
நமது வாழ்வின் முழுமையை குறிக்கிறது 11ஆம் பாவம் நான் எவ்வாறு ஆன்மீகத்தில் ஈடுபடுவோம் என்பதை பற்றியும் நாம் இருவாட்டின் ஆன்மிகம் எவ்வாறு கலந்துள்ளது என்பதையும் குறிக்கிறது இந்த 11 ஆம் பாவம் 11ஆம் பாவத்தில் அடிப்படையில் கொண்டு உங்களது நெருங்கிய நண்பர்களை பற்றி மிகத் துல்லியமாக கூற முடியும் உதாரணத்திற்கு நல்ல கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் என்பதில் அதன் எழுத்திற்கான சம்பந்தப்பட்டவர் உங்களுக்கு நண்பராவார் என்பது ஜோதிட கடிதம் உடல் உறுப்புகளான இடது காது மற்றும் கணுக்கால் பாவத்தை குறிக்கும் பதினோராம் பாவம்.
நாம் இழப்பை பற்றி கூறக்கூடியது முக்கியமான பங்கு வைக்கிறது இந்த பனிரெண்டாம் பாவம்(12th house) நமது வாழ்க்கையில் நடக்கும் விரயங்களை சொல்லக்கூடியது இந்த 12 ஆம் பாவம் அதன் சிறப்புகளை அனைத்தும் கிரகங்களின் பாதசாரங்களை வைத்தும் ஆதன் நிற்கும் நட்சத்திரங்களை கொண்டும் நமது தசா புத்திக்கு ஏற்றவாறு நமது விரயம் எவ்வாறு செயல்படுகிறது சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கலாமா என்பதையும் பன்னிரண்டாம் பாவத்தின் மூலம் நீங்கள் அறியலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாவம் அதற்குள் இருக்கும் நட்சத்திரங்களில் எந்த கிரகம் நிற்கின்றதோ அந்த கிரகம் என்ன வேலை செய்யப் போகிறது என்பதையும் நமது ஏற்படுத்தும் தசா புத்தியில் அடிப்படையில் உங்களுக்கு பலன்களை திறமை வாய்ந்த ஜோதிடர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் மேலும் ஜோதிடம் என்பது ஒரு மனிதகுல வரப்பிரசாதம் ஆகும் இதனை நமது வாழ்வில் எங்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் எந்த நேரத்தில் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யப் போவது நாம் தான் சிறந்த நேரத்தில் சரியான முடிவு எடுத்து உங்களது வாழ்வில் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள் நன்றி