சந்திரன் (moon sign) மூலம் உள் அமைதி பெறும் ஜோதிட வழிகள்

moon sign

பிறப்பு விவரங்கள்

    நிலவின் 8 நிலைகளை போலே, மனிதனின் மனநிலை

    நமது மன நிலை என்பது வெவ்வேறு விதமாக உரு மாற்றம் செய்து கொண்டே இருக்கும், அதை சமநிலை படுத்துவதுதான் ஜோதிடத்தின் ரகசியம். ஏதேனும் ஒரு முறையாவது , ஏன் இந்த மன நிலை (mood swings) மாறி கொண்டே இருக்கறது என்று உங்களுக்குள்ளேயே கேள்வி ஏழுபீர்ப்பீர்கள். அதற்கான பதில் சந்திரன் (moon sign) உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ?

    “உள் அமைதி” என்பது மனித வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கிறது, ஆனால் அதை அடைவதுதான் கடினமான இலக்காகும். ஜோதிட ரீதியில் பார்க்கும்போது, நம்முடைய பிறந்த நேர ஜாதகம் தான் நம் மனநிலை, மன நிலை மாற்றம் , மற்றும் அமைதியை குறிக்கும் பல முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது. ஜோதிட அடிப்படையில் உள் அமைதி பெற சில வழிகள் கீழே காண்போம்.

    சந்திரன் (Moon Sign)

    “நிலவு வானத்தை ஒளிர்விப்பது போல, சந்திரன் நம் மனதையும் ஒளிரச் செய்கிறான்” - சந்திரன் (moon sign) எப்படி இரவை ஒளிர செய்கிறதோ அதேபோல நம் மனதையும் ஒளிர செய்கிறது. ஜோதிடத்தில், சந்திரன் தான் நம் மனதை ஆளும் முக்கியமான தனிமம் ஆகும். சந்திரன் எப்படி இருக்கிறாரோ, நம் மனநிலை அப்படித்தான் இருக்கும்.

    சந்திரன் (moon sign) பலவீனமாக இருந்தால்: மனம் திடீரென்று குழப்பம் அடையும், பயம், ஏக்கம், சோர்வு — இவை அனைத்தும் நிழலாக நம்மை பின்தொடரும். அப்போது நம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் ஓடி, அமைதி எட்டாத தூரம் போகும்.

    சந்திரன் (moon sign) வலுவாக இருந்தால்: மனம் நிலையாகும், சிந்தனை தெளிவாகும், உணர்வுகள் ஒழுங்காக செயல்படும். அந்த நேரத்தில் நம்முள் ஒரு இயற்கை ஒளி பொங்கி வரும் — அது தான் “உள் அமைதி”.

    சந்திரன் (moon sign) சுப கிரகங்களுடன் (புதன், குரு, சுக்ரன்) இருந்தால், மனம் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கும். ஆனால் சந்திரன் பாப கிரகங்களுடன் (சனி, ராகு, கேது, மங்களன்) சேர்ந்தால், மனம் எளிதில் பாதிக்கப்படும், திடீர் மனமாற்றம், கவலை, அல்லது பயம் ஏற்படும்.

    சந்திரனின் பாவம் (House)
    • 1ஆம் பாவம்: உணர்ச்சிகள் வெளிப்படும் மனம் – அவர்கள் வெளிப்படையாக தங்கள் மனநிலையை காட்டுவார்கள்.
    • 4ஆம் பாவம்: உள்ளார்ந்த அமைதி – சந்திரன் (moon sign) இங்கே நல்ல நிலையில் இருந்தால் நம் வீட்டிலும் மனதிலும் அமைதி நிறைந்திருக்கும்.
    • 5ஆம் பாவம்: சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல் – சந்திரன் இங்கே இருந்தால் கலை உணர்ச்சி அதிகம் இருக்கும்.
    • 8ஆம் பாவம்: துயரம், ஆழ்ந்த சிந்தனை – இங்கே சந்திரன் (moon sign) இருந்தால் நம் மனம் துன்பத்தை ஆழமாக உணரும்.
    பாப கிரகங்களின் பாதிப்பு

    சந்திரனுக்கு அருகில் அல்லது அதன் பார்வையில் சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற பாப கிரகம் இருந்தால், மனதில் தூய்மையற்ற எண்ணங்கள், பயம், மனச்சோர்வு, கோபம் உருவாகலாம். இதனால் திடீர் மனமாற்றங்கள், நம்பிக்கையின்மை போன்றவை ஏற்படும்.

    உதாரணமாக: சனி சந்திரனை இணைந்தால் (சனி–சந்திர யோகம்), மனதில் எப்போதும் ஒரு உள்ளார்ந்த துயரம் அல்லது மன அழுத்தம் இருக்கும். இதை “விஷ யோகம்” என்கிறார்கள்.

    சந்திரன் (moon sign) ராகு அல்லது கேதுவுக்கு அருகில் இருந்தால், இது கிரகண தோஷம் என அழைக்கப்படுகிறது. இது “மனத்தில் குழப்பம், மாயை, மற்றும் நிஜத்தை புரிந்து கொள்ள முடியாத நிலை” உருவாக்கும்.

    சந்திரனை வலுப்படுத்த சில வழிகள்
    • திங்கள் கிழமையில் வெள்ளை ஆடை அணிந்து கொண்டிருங்கள்.
    • பால், அரிசி, மோர் போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.
    • இரவு நிலா ஒளியில் 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
    • சந்திர மந்திரம் “ஓம் சோம் சோமாய நமஹ”.
    • நீர் அருகே அமர்ந்து சுவாசப் பயிற்சி செய்யுங்கள்.

    2. லக்னம் மற்றும் 4 ஆம் பாவம் பாதிப்பு

    "மனம் குழம்பினால், பிரபஞ்சமே கலங்கும்.” ஜோதிடத்தில் 4 ஆம் பாவம் என்பது வெறும் வீடு அல்ல, நம் மனத்தின் அடித்தளம். இது மன அமைதி, உணர்ச்சி நிலை, தாயின் அருள், குடும்ப அமைதி, மற்றும் வீட்டின் ஆற்றலைக் குறிக்கிறது.

    4ஆம் பாவம் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

    4ஆம் பாவம் பாப கிரகங்களால் (சனி, ராகு, கேது, சூரியன்) பாதிக்கப்பட்டால், மனம் பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகும்: உள்ளே வெறுமை, கவலை, மனச்சோர்வு ஏற்படும், வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள், அசாதாரணமான அழுத்தங்கள், உறவுகளில் பதட்டம் உருவாகும், “வீட்டில் இருந்தாலும் அமைதி இல்லை” என்ற உணர்வு தோன்றும், தாய் அல்லது குடும்பத்துடன் தூரம், மனதளவில் பிரிவு போன்ற அனுபவங்கள் ஏற்படும், மனம் எப்போதும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே இருக்கும், ஆனால் அந்த தேடல் அமைதியாக முடியாது.

    அமைதியை மீட்க செய்யவேண்டியவை
    • வீட்டில் சுத்தம் மற்றும் ஒளி: வீடு எப்போதும் சுத்தமாகவும் வாசனை நிறைந்ததாகவும் இருக்கட்டும். நம் சூழல் நம் மனநிலையை பிரதிபலிக்கிறது; ஒழுங்கான சூழல் மன அமைதியை ஊக்குவிக்கும்.நிழல் மிகுந்த இடங்களில் ஒளி, தீபம் அல்லது சின்ன விளக்கு ஏற்றுங்கள்.
    • தினசரி தீபம்:காலையும் மாலையும் தீபம் ஏற்றி வீட்டை சுத்திகரிக்கவும். இது “நெகட்டிவ் எனர்ஜி” அகற்றுவதுடன், மனதை தளர்த்தும்.
    • மந்திர ஜபம்: தினசரி காலை அல்லது மாலை “ஓம் நமோ நாராயணாய” அல்லது “ஓம் நம சிவாய” ஜபம் செய்யுங்கள். இதனால் மன அழுத்தம் குறையும், உள்ளார்ந்த நம்பிக்கை வளரும். சந்திரன் (moon sign) மற்றும் சூரியன் இருவருக்கும் அர்ப்பணித்த ஜபங்கள் மன அமைதியை தாங்கும் சக்தியாகும்.
    • தாய் பாசம்: தாயுடன் நேரம் செலவிடுங்கள் அல்லது தாய் போன்ற ஒரு நபருக்கு நன்றியை வெளிப்படுத்துங்கள். 4ஆம் பாவம் தாயாரை குறிக்கும், அவரின் ஆசீர்வாதம் இந்த பாவத்தை வலுப்படுத்தும்.
    • தியானம் மற்றும் பிராணாயாமம்:தினசரி 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து சுவாசத்தை கவனியுங்கள். இது மன அலைச்சலை சமநிலைப்படுத்தி, உள் அமைதியை மீட்டெடுக்கும்.

    3. வழிபாடுகள் – ராகு–கேது அமைதி வழிபாடு

    ராகு மற்றும் கேது ஜாதகத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தும் சாயா கிரகங்கள். இவை நம் மனத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் பயம், ஆசை, குழப்பம், கர்ம சோதனைகள் ஆகியவற்றை இயக்கும் சக்திகள்.

    ராகு நம்மை வெளிப்புற வெற்றி மற்றும் ஆசை நோக்கி இழுக்கிறான். கேது அதற்கு மாறாக, துறவு, தியானம், ஆன்மிகம் நோக்கி அழைக்கிறான். இவை சமநிலையில் இருந்தால் மனம் தெளிவாக இயங்கும்; இல்லையெனில் மன கலக்கம் அதிகரிக்கும்.

    ராகு–கேது பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்
    • திடீர் மனஅழுத்தம், சோர்வு, திசைமாறல்
    • வாழ்க்கையில் நோக்கம் இல்லாமல் இருப்பது
    • உறவுகளில் கலக்கம் அல்லது நம்பிக்கை இழப்பு
    • கடந்த கால நினைவுகள் அல்லது தீராத ஆசைகள்
    • சிந்தனை மற்றும் உணர்ச்சி இடையே சமநிலை இழப்பது

    இவை அனைத்தும் ராகு –கேது பாவங்கள் அல்லது ராசிகளில் ஏற்பட்ட பாதிப்பைச் சுட்டிக்காட்டலாம்.

    ராகு–கேது பரிகாரங்கள்
    • வழிபாடு மற்றும் பூஜைகள்: சனிக்கிழமை அல்லது ராகு காலம் (மாலை 4.30–6.00) ஆகிய நேரங்களில் ராகு–கேது வழிபாடு சிறந்தது. நாகதோஷ நிவர்த்தி பூஜை, நாகராஜர் வழிபாடு, அல்லது திருநாகேஸ்வரம், குக்கே சுப்ரமண்யா, கேதார்நாத் போன்ற தலங்களில் வழிபடலாம். பால், தேன், வெள்ளை பூவுடன் நாகராஜருக்கு அர்ச்சனை செய்தால் மன அமைதி பெருகும்.
    • தியானம் மற்றும் பிராணாயாமம்:தினசரி 10–15 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் (Pranayama) செய்யுங்கள். மூச்சை கவனிப்பது ராகு–கேது ஏற்படுத்தும் மனஅலைச்சலை கட்டுப்படுத்தும்.தியானம் செய்வது மனதின் ஆழத்தில் இருக்கும் நிழல் உணர்வுகளை ஒளிரச் செய்கிறது.
    • தானம் மற்றும் நற்செயல்கள்: ராகு பாதிப்பு இருந்தால் கருப்பு எள், உளுந்து, நீல ஆடை தானம் செய்யலாம்.கேது பாதிப்பு இருந்தால் பறவைகள், நாய், பாம்பு தொடர்பான நற்செயல்கள் (உணவு, பாதுகாப்பு) நல்லது. இது கர்ம சோதனைகளை குறைத்து மன அமைதியை வளர்க்கும்.
    • மன ஒழுக்கம்:ராகு–கேது சோதனைக்காலங்களில் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்காமல் இருக்கவும், முக்கிய முடிவுகளை தாமதிக்கவும், தெளிவுடன் சிந்திக்கவும், சுயபரிசோதனை மற்றும் ஆன்மிக சிந்தனை ஆகியவை. இந்த பாவங்களை சமநிலைப்படுத்தும் முக்கிய வழிகள்.

    ஜாதகத்தில் ராகு–கேது, சூரியன், சந்திரன் (moon sign), சனி போன்ற கிரகங்கள் மனத்தில் ஏற்படும் அலைபாய்தல், பயம் மற்றும் குழப்பங்களை வெளிப்படுத்தும் வழிகாட்டிகளாக உள்ளன. ஆனால் தியானம், வழிபாடு, நல்ல பழக்கங்கள், மற்றும் வீட்டின் சூழல் சுத்தம் ஆகியவற்றை பின்பற்றினால் மன அமைதி, நம்பிக்கை மற்றும் உள்ளார்ந்த உற்சாகம் மீண்டும் வளரும்.

    RECENT POST