சனி பெயர்ச்சி – ஜாதக பலன்கள், தாக்கங்கள் மற்றும் பரிகாரங்கள்
2025-10-28

"பத்தில் குரு பதவிக்கு இடர்”, "குரு பார்க்க கோடி நன்மை”: "பத்தில் பாம்பு இருந்தால் பணம் வரும் என்பதைப் போன்ற பல்வேறு கணிப்பை ஜோதிடர்கள் சொல்வார்கள், விண்மீன் அசைவு; நம் வாழ்க்கை விளைவு என்பதிற்கேற்ப ஒருவரின் பிறந்த தேதி, நேரம் , நாள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கோள்கள் மற்றும் நட்சத்திரத்தின் நிலைகளை வைத்து நமது குணம், எதிர்காலம் போன்ற பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வதுதான் ஜோதிடம்.
12 ராசிகளை அடிப்படையாக வைத்தே ஒரு ஜாதகத்தை கணிக்கின்றனர். அவர் பிறந்த நேரத்திலும் இடத்திலும் கிரகங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைக் காட்டும். எப்படி கிரகங்களின் இயக்கம் நம் மனம், உடல், வேலை, பணம் போன்ற அனைத்தையும் பாதிக்கலாம் என்பதை இந்த ஜாதகம் (jathagam) நமக்கு விளக்குகிறது.
கடினமான நாட்களில் ஆறுதல் பெறுவதற்ககாகவும் , தன் வாழ்க்கை பாதையை நிர்ணயிர்ப்பதற்காகவும் நாம் ஜாதகத்தை நாடுகிறோம். இதற்க்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணங்கள் கருதப்படுபவை, சுய விழிப்புணர்வு, வழிகாட்டுதல், தெளிவு மற்றும் ஆறுதல் ஆகும்.
"நாம நினைச்சது சரிதானா இல்ல இது கண்டீப்பா நடக்குமா, நம்ம பொண்ணுக்கு இப்போதான் கல்யாணம் நடக்குமோ, என வீட்டை காட்டிலும் நாம் அதிகமாக குடியிருக்கும் இடம் நம் சிந்தனைகளே. இந்த வாழ்வியல் குழப்பங்களை நட்சத்திரம் மற்றும் கோள்களின் நிலையை வைத்து ஜோதிடம் உறுதி செய்வது புது நம்பிக்கை வளர்கிறது.
முதலில் அந்த நபரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகிய மூன்று தகவல்கள் தேவையானவை. இதுவே ஜாதகக் கட்டம் வரையப் பயன்படும் அடிப்படை.
மேற்கொண்ட தகவல்களை வைத்து 12 வீட்டுகளுடன் கூடிய ஜாதகக் கட்டம் உருவாக்கப்படும். ஒவ்வொரு வீட்டும் வாழ்க்கையின் வெவ்வேறு துறைகளை (குடும்பம், வேலை, காதல், செல்வம், ஆரோக்கியம்) குறிக்கும்.
12 ராசிகளில் ஒருவர் எந்த ராசியில் பிறந்திருக்கிறார் என்பதை அறிவது மிகவும் முக்கியம். ஒவ்வொரு ராசியும் வெவ்வேறு குணங்கள் மற்றும் பண்புகளை குறிக்கிறது. ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியது லக்னம். இது ஒருவரின் உயிர் சக்தி மற்றும் ஆளுமையைக் குறிக்கிறது. லக்னம் என்பது நம்முடைய பலவீனங்கள், பலங்கள் மற்றும் குணாதிசயங்கள் தெளிவாக அறிய இது உதவும்.
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் என்பதை அறிவது முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறு குணங்கள் மற்றும் பண்புகளை குறிக்கிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு பகுதிகளை குறிக்கிறது. உதாரணமாக, சூரியன் ஆன்மாவையும், சந்திரன் மனதையும் குறிக்கிறது. கிரகங்கள் ஒருவருக்கொருவர் பார்வையிடும்போது, அது நல்ல அல்லது கெட்ட பலன்களைத் தரும்.
ஒரு ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளன. அது "வீடு" எனப்படும். ஒவ்வொரு பாவமும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கிறது, அதாவது குடும்பம், நிதி, கல்வி, திருமணம், தொழில், ஆரோக்கியம் போன்றவையாகும்.
அடுத்த கணிப்பு முறை தசா-புத்தி. இந்த முறைப்படி, ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் வைத்து கணக்கிடப்படும். தசா என்பது நவகிரகங்கள், அது ஒருவர் ஜாதகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்வது. புத்தி என்பது தசா காலத்திற்குள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரும் கிரகத்தின் உட்பிரிவு ஆகும். தசாபுத்தி கிரகங்களின் தாக்கம் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள், யோக, அவயோக பலன்களைக் கணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி தொழில், திருமணம் போன்றவைகள் எப்போது நடக்கும் என்பதைக் கண்டறிய உதவுகிறது.
கிரகங்களின் நிலை என்பது வானியல் மற்றும் ஜோதிடத்தில் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது வானியலில், பூமி மற்றும் கிரகம் ஆகியவற்றின் நிலையை இது குறிக்கிறது. கிரகங்களின் நிலையை மதிப்பிடுவதில் பஞ்சாங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை ஒரு நபரின் வாழ்க்கையின் பல அம்சங்களை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு கிரகமும் தனிப்பட்ட குணங்களை உடையது
இன்றைய கிரக நிலையை தெரிந்து கொண்டு சுப நேரங்களில் செயல்படுவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் நிம்மதியை அடைய முடியும். இது ஒரு நபரின் வாழ்க்கைக்கு திசையையும், வெற்றியையும் தரும் முக்கிய கருவியாகும்.
ஜாதகம் (jathagam) பார்ப்பது என்பது வெறும் கிரகங்களையும் ராசிகளையும் எண்ணிப் பார்ப்பது மட்டும் அல்ல. அது ஒரு உணர்வும் அனுபவமும் வேண்டும். அதில் துல்லியம் மிக அவசியம்.
பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை சரியாக இல்லையெனில் ஜாதகத்தின் முடிவுகளும் தவறாகிவிடும். சில நிமிட வேறுபாடு கூட லக்னத்தையும் ராசியையும் மாற்றி விடலாம்.
சந்திரன் நம் மனநிலையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவை. அதனால் ராசி கணிப்பில் சந்திரன் எந்த வீட்டில் இருப்பது என்பது மிகவும் முக்கியம்.
ஒரே ராசியில் பிறந்த இருவர் கூட ஒரே விதமாக இருக்க மாட்டார்கள். அதனால் மற்றவரோடு ஒப்பிடாமல், உங்கள் ஜாதகத்தின் தனித்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற இந்த ஜாதகம் (jathagam) என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை நுணுக்கமாகவும் விரிவாகவும் கணிக்க உருவாக்கப்பட்டுள்ளது. துல்லியமான கிரக கணிப்புகளின் அடிப்படையில், இந்த ஜாதகம் (jathagam) ஒருவரின் வாழ்க்கை பல்வேறு அம்சங்களில் முன்னேற்றம் பெற வழிகாட்டும் ஒரு நம்பகமான கருவியாக உள்ளது.

சனி பெயர்ச்சி – ஜாதக பலன்கள், தாக்கங்கள் மற்றும் பரிகாரங்கள்
2025-10-28

குரு பெயர்ச்சி (guru peyarchi) – வாழ்க்கையின் புதிய பலன்கள்
2025-10-28

கர்மா (Karma) மூலம் பிறவியைப் புரிந்துகொள்ளும் வழிகள்
2025-10-25

ராகு (rahu kaalam) காலம், அர்த்தம், விளைவுகள் & நோக்கம்
2025-10-25

கௌரி பஞ்சாங்கம் (panchangam)– சுப காலங்களின் அர்த்தம்
2025-10-24

சுப ஹோரை (horai) – ஒவ்வொரு கிரக ஹோராவின் அர்த்தமும் பலனும்
2025-10-23

தசை(dasa)–புத்தி விளக்கம்: கர்ம பலன்களின் ஜோதிடம்
2025-10-17

தசா dasa – கிரகங்கள் வழிநடத்தும் கர்ம நேரவியல் ரகசியம்
2025-10-17

ராசி விளக்கம் – பிறந்த நேரத்தின் ஜோதிட அர்த்தம்
2025-10-17

பிறந்த நட்சத்திரம் – அர்த்தம், வகைகள், மற்றும் பொருள்
2025-10-16

ஜாதகம் (jathagam) கணிக்க - குறிப்புகள் மற்றும் ரகசியங்கள்
2025-10-14

ஜாதகத்தின் வகைகள், அர்த்தம் மற்றும் வாழ்க்கை பலன்
2025-10-13

இலவச வாழ்நாள் ஜாதகம் - துல்லியமான ஜோதிட கணிப்பு
2025-10-12

பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் ராசி
2025-10-11

ஜாதகம் எவ்வாறு கணிக்கப்படுகிறது? முழு விளக்கம்
2025-10-09

நவகிரகங்கள் சொல்லும் மனித குணங்கள் | உருவக ஜோதிடம்
2025-10-08

இலவச வாழ்நாள் ஜாதகம்
2025-09-12

பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் ராசி
2025-09-06

ஜாதகத்தில் சந்திரனின் முக்கியத்துவம்
2025-09-22