ஏன் நல்ல நேரம் பார்க்க வேண்டும்?
தனித்தனி தெய்வ ஆற்றல் அமைந்திருக்கிறது. அதற்காக nalla neram பார்க்கும் பழக்கம் தலைமுறைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.எனவே ஒவ்வொரு நாளின் இயல்பையும் அறிந்து அதற்கேற்ற காரியங்களைச் செய்தால், நம் எடுத்த காரியங்களுக்கு வெற்றி கிடைக்கும், மன அமைதி, அனைத்தும், நம்மை நோக்கி வரும் என நம்பப்படுகிறது. இதையே அடிப்படையாகக் கொண்டு,
ஒவ்வொரு நாளும் எந்த காரியத்திற்கு உகந்தது, எந்த திசையில் பிரயாணம் செய்யலாம், எப்போது nalla neram என்பதைப் அறிந்து செயல்பட்டால் நன்மை தரும்.
நாள், திசை, நேரம், இந்த மூன்றையும் சரியாக தெரிந்துகொண்டு செயல்பட்டால், எந்த காரியத்திலும் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தனித்தனி கிரக சக்தி மற்றும் ஆற்றல் கொண்டது. அந்த நாளின் இயல்பை அறிந்து அதற்கேற்ற காரியங்களைச் செய்தால் வாழ்வில் மன அமைதி, வாழ்க்கை செழிப்பு, முன்னேற்றம் போன்றவை நிச்சயம்.
நாள், திசை, நல்ல நேரம் (Nalla Neram); மூன்று தூண்கள்
நாம் எந்த காரியத்தையும் தொடங்கும் முன், அந்த நாள் மற்றும் nalla neram பார்த்து செயல்படுவது மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. இது ஒரு அறிவியல் சார்ந்த நேர ஒழுங்கு முறையாக கூட கருதலாம். ஏனெனில் சூரியன், சந்திரன் , கிரகங்கள் அனைத்தும் நம்முடைய மனநிலையிலும், உணர்ச்சிகளிலும் சிறந்த தாக்கம் செலுத்துகின்றன.
ஞாயிற்றுக்கிழமை – சூரியனின் ஆற்றல் நாள்
ஞாயிறு என்பது சூரிய பகவானின் நாள். இதனால், ஆண்மை, ஆட்சித்திறன், அதிகாரம் ஆகியவற்றின் அடையாளமாகும்.
செயல்கள்: இந்த நாளில் வடக்கு திசையில் பிரயாணம் செய்தல், அரசு அலுவலக பணிகள், மருந்து உட்கொள்ளுதல் போன்றவை சிறந்த பலனை தரும். உடல் நலம் சார்ந்த செயல்கள், மருத்துவ சிகிச்சைகள், அதிகார பணிகள் அனைத்தும் இந்த நாளில் மேற்கொள்வது நன்மை தரும்.
நல்ல ஓரை:
- காலை 7.30 மணி முதல் 10.00 மணி வரை
- மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை
- இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை
பரிந்துரை: ஞாயிற்றுக்கிழமை சூரியன் ஆதிக்கம் செலுத்தும் நாளாக இருப்பதால், பொன்னிற உடைகள், சிவப்பு நிறங்கள் அணிதல் சுபபலன் அளிக்கும்.
திங்கட்கிழமை – சந்திரனின் நாள்
திங்கட்கிழமை சந்திர பகவானின் நாள். இதனால் மனநிலை, குடும்ப உறவுகள், அமைதி ஆகியவை மேம்படும் நாள் எனக் கருதப்படுகிறது.
செயல்கள்: தென் திசையில் பிரயாணம் செய்தல், கிரஹப்பிரவேசம், திருமணத்திற்குப் பெண் பார்த்தல், ருது சாந்தி, வியாபாரம் தொடங்குதல் போன்றவை நன்மை தரும்.
நல்ல ஓரை:
- காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
- மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை
- மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
- இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை
பரிந்துரை: திங்கட்கிழமையில் வெள்ளை நிற ஆடைகள், பால் உணவுகள், பசு வழிபாடு ஆகியவை மன அமைதியையும் செல்வாக்கையும் அதிகரிக்கும். இந்த நல்ல நேரம் (nalla neram), உறவுகள் மற்றும் குடும்ப செயல்களுக்கு சிறப்பாக அமையும்.
செவ்வாய்க்கிழமை – செவ்வாயின் நாள்
செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஆளும் நாள். இது தைரியம், சக்தி, உழைப்பு ஆகியவற்றை குறிக்கிறது.
செயல்கள்: இந்த நாளில் கிழக்கு திசையில் பிரயாணம் செய்தல், கடன் தீர்த்தல், உரமிடல், சூளையில் நெருப்பிடுதல் போன்றவை மிகுந்த நன்மை தரும். ஆனால் புதிய வேலைகள், திருமணம், வீடு புகுதல் போன்றவற்றைத் இந்நாளில் தவிர்க்கலாம் என பழமொழி கூறுகிறது.
- காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை
- மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை
- மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரை
- இரவு 7.00 மணி முதல் 12.00 மணி வரை
பரிந்துரை: செவ்வாய் நாளில் சிவப்பு நிற உடைகள் அணிதல், சமையல், உலோக வேலை, தொழிற்சாலை செயல்பாடுகள்
புதன்கிழமை – புதனின் அறிவு நாள்
புதன் கிரகத்தின் நாள். இது அறிவு, கல்வி, எழுத்துத் திறன், கலை ஆகியவற்றின் அடையாளமாகும்.
செயல்கள்: இந்த நாளில் மேற்கு திசையில் பிரயாணம் செய்தல், ஆராய்ச்சி துவங்குதல், எழுத்து வேலைகள் ஆரம்பித்தல், வழக்கறிஞரைச் சந்தித்தல், புதுமனை புகுதல், கிணறு மற்றும் குளம் வெட்டுதல், விதை விதைத்தல், அறுவடை செய்தல், சீமந்தம், காது குத்துதல் போன்ற செயல்கள் அனைத்தும் மிகச் சிறந்த பலனை தரும்.
- காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை
- மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
- மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை
- இரவு 7.00 மணி முதல் 12.00 மணி வரை
பரிந்துரை: புதன்கிழமை பச்சை நிறம் அணிதல், கல்வி சார்ந்த காரியங்களைத் தொடங்குதல் மிகச் சிறந்த பலனை தரும். இது “புத்திசாலிகளின் நாள்” என்றும் அழைக்கப்படுகிறது.
வியாழக்கிழமை – குருவின் நாள்
வியாழன் குரு ஆளும் நாள். இது ஞானம், ஆன்மிகம், குடும்ப நலன், ஆசான், கல்வி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
செயல்கள்: மேற்கு திசையில் பிரயாணம் செய்தல், வேலை வாய்ப்பில் சேருதல், வங்கிப் பணிகள், பெரியோரைச் சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், புதுமனை புகுதல், விவசாயப் பணிகள் ஆகியவற்றுக்கு வியாழக்கிழமை மிகச் சிறந்த நாள்.
- காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
- மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை
- மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை
- இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை
பரிந்துரை: வியாழன் நாளில் மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் மற்றும் குங்குமம், குருவுக்கான வழிபாடு போன்றவை ஆன்மிக வளர்ச்சியையும் குடும்ப வளத்தையும் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை – சுக்ரனின் நாள்
சுக்ரன் ஆளும் நாள். இது அழகு, காதல், கலை, செல்வம் ஆகியவற்றின் அடையாளமாகும்.
செயல்கள்: வட திசையில் பிரயாணம் செய்தல், திருமணத்துக்குப் பெண் பார்த்தல், காதலர் சந்திப்பு, காது குத்துதல், ருது சாந்தி, விருந்துண்ணல், வாகனம் வாங்குதல், விவசாயம் மற்றும் வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றுக்கு மிகவும் உகந்த நாள்.
- காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
- மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை
- மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
- இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை
பரிந்துரை: வெள்ளிக்கிழமை வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை நிற ஆடைகள், தெய்வ வழிபாடு, தாய்மையின் சக்தியுடன் தொடர்புடைய காரியங்கள் சிறப்பாகச் செல்லும்.
சனிக்கிழமை – சனியின் நாள்
சனிக்கிழமை சனி பகவான் ஆளும் நாள். இது ஒழுக்கம், பொறுமை, உழைப்பு, நீதி ஆகியவற்றின் பிரதிபலிப்பு.
செயல்கள்:இந்த நாளில் தெற்கு திசையில் பிரயாணம் செய்தல், நிலம், மனை சம்பந்தப்பட்ட விஷயங்கள், இரும்பு தொடர்பான பணிகள் செய்வது நல்ல பலனை தரும். ஆனால் புதிய காரியங்களைத் தொடங்குவதில் கவனம் தேவை.
- காலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை
- காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
- மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை
- இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை
- மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை
பரிந்துரை: சனிக்கிழமை கருப்பு அல்லது நீல நிற ஆடைகள் அணிதல், சனீஸ்வர வழிபாடு, எண்ணெய் தீபம் ஏற்றுதல் நலன்களை தரும்.
பொது நம்பிக்கைகள்
- ஞாயிறு – சுப காரியங்களுக்கு சிறந்த நாள்.
- புதன், வியாழன் – பணம், கல்வி, வியாபாரம் சார்ந்த காரியங்களுக்கு உகந்தது.
- திங்கள், வெள்ளி – காதல், குடும்பம், உறவுகள் சார்ந்த செயல்களுக்கு சிறந்தது.
- செவ்வாய், சனி – கடின உழைப்பு, திட்டமிடல், சிந்தனைக்கான நாள்.
முடிவுரை
நாள்தோறும் வேறுபட்ட ஆற்றல்கள் நம்மைச் சுற்றி செயல்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் நமது செயல் திட்டமிடப்படும்போது, வாழ்க்கை இன்னும் சீராகச் செல்லும். ஒவ்வொரு நாளும் தன்னுடைய தனித்தன்மையும் கிரக ஆற்றலையும் கொண்டுள்ளது. அவற்றை மரியாதையுடன் அணுகினால் வாழ்க்கை அமைதியும் வளமும் நிறைந்ததாக மாறும்.
